வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வாலிபரோடு உல்லாசமாக இருந்தாள்... டிக் டாக் வீடியோவில் கொஞ்சி பேசினாள்!! பெட் ரூமில் மனைவியை!? கணவனின் பகீர் வாக்குமூலம்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

வாலிபரோடு உல்லாசமாக இருந்தாள்... டிக் டாக் வீடியோவில் கொஞ்சி பேசினாள்!! பெட் ரூமில் மனைவியை!? கணவனின் பகீர் வாக்குமூலம்.!

பெண் கொலையில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவன் எரித்துக் கொன்ற சம்பவம் பெர்ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ரெயில்வேநகர் பகுதியில், கடந்த மாதம் 14ந்தேதி ஒரு சாக்குமூட்டை தீயில் எரிந்துகொண்டிருந்தது. அதில் இருந்து பயங்கர நாற்றமும் வீசியதால் அந்த பக்கம் சென்றவர்கள் பொஈஸாருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்த;போலீஸ் சாக்குமூட்டையில் பற்றி எரிந்த தீயை அணைத்து சோதனையிட்டனர். அப்போது அதில், ஒரு பெண் பிணம் அரைகுறையாக எரிந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பூங்காநகரை சேர்ந்த சிவசங்கரன் என்பவர், கடந்த மாதம் 9-ந்தேதி தான்தோன்றிமலை போலீசில் தனது மனைவி சூரியகுமாரியை காணவில்லை என்று புகார் அளித்தார்.


அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்ததில் அவர்களுடன் சேர்ந்து சிவசங்கரனும் மனைவியை தேடி அலைந்தார். பல்வேறு இடங்களில் போலீசார் தேடியும் சூரியகுமாரி பற்றி அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சிவசங்கரனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 
அதையடுத்து அவருடைய செல்போனை ஆய்வு செய்தால் துப்பு கிடைக்கலாம் என்று போலீசார் கருதினர். இதனால் போலீசார் அவரிடம் செல்போனை தரும்படி கேட்டனர். ஆனால் அவர் தனது செல்போன் தொலைந்துவிட்டதாக சொன்னதால் சந்தேகமடைந்த போலீசார் அவருடைய செல்போன் கடைசியாக எங்கு பயன்படுத்தப்பட்டது என்று சைபர் கிரைம் போலீசார் மூலம், தான்தோன்றிமலை போலீசார் ஆய்வு செய்தனர். 
அப்போது கடந்த மாதம் 8-ந்தேதி அது கொடைரோடு அருகே பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கொடைரோடு போலீசாரை தொடர்புகொண்ட தான் தோன்றிமலை போலீசார் சிவசங்கரனின் செல்போன் டவர் காட்டிய இடத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்ததா? என்று விசாரித்ததில் அப்போது சாக்குமூட்டையில், எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் பிணத்தை கைப்பற்றிய விவரத்தை அம்மையநாயக்கனூர் போலீசார் தெரிவித்தனர்.
அதையடுத்து சிவசங்கரனை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்து, கொடைரோட்டுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து தனது மனைவியின் உடலை சாக்குமூட்டையில் போட்டு வீசிச்சென்ற இடத்தை அடையாளம் காட்டியுள்ளார்.


பின்னர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில்; எனது மனைவிக்கும் ஒரு வாலிபருக்கும் தகாத உறவு இருந்தது. அந்த வாலிபரோடு தனிமையில் இருந்தது தெரிந்து  அவரை கண்டித்தேன். ஆனால் எனது மனைவி கள்ளக்காதலை கைவிடவில்லை. அத்துடன் அந்த வாலிபருடன்  இணைந்து கொஞ்சிப்பேசி ‘டிக்-டாக்’ வீடியோவில் வெளியிட்டார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். 
அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி இரவு வீட்டுக்கு சென்ற நான், பெட்ரூமில் தூங்கிக்கொண்டிருந்த சூரியகுமாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தேன். பின்னர் அவருடைய உடலை சாக்குமூட்டையில் கட்டி பெட்ரூமில் வைத்துவிட்டு தூங்கினேன். பின்னர் அடுத்த நாள் காரில் அந்த சாக்குமூட்டை போட்டு கொடைரோடு அருகே, ரெயில்வே நகர் பகுதிக்கு வந்தேன். பின்னர் அங்குள்ள காலியிடத்தில் அந்த மூட்டையை வீசிச்சென்றேன். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் எனது செல்போனை வீசிவிட்டு திரும்பிவிட்டேன்.
மேலும் என் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக 9-ந்தேதி சூரியகுமாரியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தேன். ஆனால் நான் கொலை செய்ததை போலீசார் எப்படியோ கண்டுபிடித்துவிட்டனர். அதனால் நான் போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். 
சாக்குமூட்டையில் வீசிச்சென்றதாக சிவசங்கரன் கூறியதையடுத்து, யார் அந்த சாக்குமூட்டைக்கு தீ வைத்தது என்று போலீசார் விசாரித்ததில் சாக்குமூட்டை இருந்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் யாரோ மர்ம நபர்கள் சிலர் அதற்கு தீ வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment