வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மசாஜ் சென்டரா இது.. உள்ளே நுழைந்து... ஷாக் ஆன போலீஸ்.. 6 பெண் புரோக்கர்கள் கைது!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

மசாஜ் சென்டரா இது.. உள்ளே நுழைந்து... ஷாக் ஆன போலீஸ்.. 6 பெண் புரோக்கர்கள் கைது!

மசாஜ் சென்டரில் விபச்சார புரோக்கர்களாக செயல்பட்ட 6 பெண்களை போலீசார் கைது செய்துள்ளது மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொஞ்ச நாளாகவே மதுரையில் மசாஜ் சென்டர், ஆயுர்வேதிக் சிகிச்சை மையம், ஸ்பா, ஹெல்த்கேர் என்ற பெயரில் விபசாரம் நடந்து வருவதாக போலீசுக்கு தகவல் வந்தவண்ணம் இருந்தன




இதனால் அந்த புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி போலீசாரும் இது சம்பந்தமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், காளவாசல் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில், விபச்சாரம் நடந்து வருவதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், விரைந்து சென்று அந்த மையத்தை சோதனை நடத்தினர்.



அப்போது, கேரளா, சென்னையை சேர்ந்த பெண்களை புரோக்கர்கள் அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இதை பற்றி அந்த பெண்கள் சொல்லும்போது, நாங்கள் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், வேலை வாங்கி தருவதாக சொல்லி எங்களை இங்கே ஏமாற்றி கூட்டி வந்து விபச்சாரத்தில் தள்ளிவிட்டதாக சொன்னார்கள்.



இதையடுத்து புரோக்கர்கள், கார்த்திக் முருகன், ஸ்ரீரவன், மற்றும் காயத்திரி, நாகேஸ்வரி, ஜோபிதா என்ற 3 பெண்கள் என மொத்தமாக 5 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். இப்படி விபச்சாரம் செய்து, பணம் வசூலிக்க ஸ்வைப் மிஷின் கூட இவர்கள் வைத்திருந்து இருக்கிறார்களாம். 

அவற்றையும் பறிமுதல் செய்தனர் போலீசார். பின்னர், அதே பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் இதேபோல விபச்சாரம் செய்வதாக தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்தனர் போலீசார். அந்த மசாஜ் சென்டர் ஓனர் பிரின்ஸ் இம்மானுவேல் உட்பட கனிமொழி, திவ்யா, சத்யாவை கைது செய்தனர். அதாவது கைதான 6 பெண்களும் விபச்சார புரோக்கர்களாக நீண்ட காலமாகவே இருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: Tamilnadu Latest Sex News, TamilNadu Prostitution News, Massage centre news, Madurai Latest News

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment