அரசாங்க வேலை ஒன்றில் பணிபுரிய வேண்டும் என்று அனைவருக்கும் ஆசைகள் இருக்கும். அது மத்திய அரசோ அல்லது மாநில அரசாங்க வேலையோ எதுவாக இருந்தாலும் அரசு வேளையில் பணியாற்றினால் போதும் என்ற எண்ணம் அனைவரும் மத்தியில் பரவலாக இருக்கும்.
அந்த வகையில் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் வேலை வாய்ப்புகளை அவ்வப்போது அறிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.10.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
காலியாக உள்ள பணியிடங்களின் விபவரம்:
சீப் கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர்(Chief Commercial – Ticket Supervisor) – 1736
ஸ்டேஷன் மாஸ்டர்(Station Master) – 994
சரக்கு ரயில் மேலாளர்(Goods Train Manager) – 3144
சீனியர் கிளார்க் - டைப்பிஸ்ட்(Junior Account Assistant – Typist )– 1507
சீனியர் கிளார்க் - டைப்பிஸ்ட்(Senior Clerk – Typist )– 732
கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க்(Commercial – Ticket Clerk) – 2022
கணக்கு எழுத்தர் - தட்டச்சர் -(Accounts Clerk – Typist )– 361
ஜூனியர் கிளார்க் - தட்டச்சர்(Junior Clerk – Typist )– 990
ரயில்கள் கிளார்க்(Trains Clerk) – 72
உள்ளிட்ட மொத்தம் ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி:
ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் :
வணிக தலைமை - டிக்கெட் சூப்பர் வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் பணியிடங்கள் உள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் பணியிடங்கள் உள்ளது.
வயதுத் தகுதி :
டிகிரி தகுதி பணியிடங்களுக்கு 01.01.2025 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.
12 ஆம் வகுப்பு தகுதி பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குறிப்பாக OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC மற்றும் ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு என தெரிவிக்கபட்டுள்ளது.
சம்பளம் விவரங்கள் :
ஏதாவது ஒரு டிகிரி முத்தவர்கள் :
வணிக தலைமை - டிக்கெட் சூப்பர் வைசர் – 35,400
ஸ்டேஷன் மாஸ்டர் - 35,400
சரக்கு ரயில் மேனேஜர் - 29,200
ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் ,டைபிஸ்ட் - 29,200
சீனியர் கிளர்க் - 29,200
+2 முடித்தவர் சம்பளம் விபரம்:
கமர்ஷியல் - டிக்கெட் கிளரக் - 21,700
அக்கவுண்ட்ஸ் கிளர்க்- டைபிஸ்ட் - 19,900
ஜூனியர் கிளர்க் - டைபிஸ்ட் - 19,900
ரயில் கிளர்க் - 19,900
மேலும், பணியிடங்களுக்கு ஏற்ற மாதிரி சம்பளத்தொகை மாறுபடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள், இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 13 - 10 - 2024 ஆகும்.
விண்ணப்ப கட்டணம் :
விண்ணப்ப கட்டணம் ரூ. 500 ஆகும். இதில் SC, ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250 ரூபாய் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காலை பணியிடங்கள் குறித்து முழு விவரம் தெரிந்து கொள்ள https://www.rrbchennai.gov.in/ https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான விவரங்களை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment