நெடுஞ்சாலைத்துறை ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து உரிய முறையில் விசாரணை நடத்தக்கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அப்போதே இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. பின்னர் இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
"சட்டம் ஒழுங்கை திமுக சீரழித்து வைத்திருக்கிறது"- கல்யாணசுந்தரம், அதிமுக அதன்படி, இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்து வந்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தீர்ப்பளித்தது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் 2018-ல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளார். 12 சாட்சிகள், 112 ஆவணங்கள் குறித்து கூடுதல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியுள்ளார். புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்து வேண்டியவர்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி டெண்டர் வழங்கினார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளார்.
மேலும், 2018-ல் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்தவொரு தவறும் இல்லை. எனவே, ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடு காணமுடியாது. அதுமட்டுமல்லாமல் ஆட்சி மாற்றத்தின் காரணமாகப் புதிதாக விசாரணை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
அரசியல் செய்திகள்
அரசியல் தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment