வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: லாரி ஓட்டுநரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டு... அகற்றாமல் தையல் போட்ட செவிலியர்கள்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, June 06, 2023

லாரி ஓட்டுநரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டு... அகற்றாமல் தையல் போட்ட செவிலியர்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்திருக்கும் உதயேந்திரம் பகுதியைச்சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன், வயது 45. இவர், நேற்று காலை மாதனூர் அருகே லாரியை ஓட்டிச் சென்றபோது, பின்னால்வந்த தனியார் பேருந்து மோதியது.


இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் கார்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கிருந்தவர்கள் கார்த்திகேயனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பணிநேரத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், கார்த்திகேயனுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்த செவிலியர்களே தலையில் ஏடாகூடமாகத் தையல் போட்டு சாதாரண வார்டுக்கு மாற்றியிருக்கிறார்கள். அப்போதும் தையல் போடப்பட்ட தலைப் பகுதியிலிருந்து ரத்தம் வழிவது நிற்கவில்லை. அவருக்குத் தலையில் கடுமையான வலியும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால், அதிருப்தியடைந்த கார்த்திகேயனின் உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீபுரம் மலைக்கோடி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 தனியார் மருத்துவர்கள் மீண்டும் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது. தையல் போடப்பட்ட இடத்தில் 'இரும்பு நட்டு' இருப்பதைக் கண்டு மருத்துவர்களும், கார்த்திகேயனின் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தையல் பிரிக்கப்பட்டு அந்த இரும்பு நட்டு அகற்றப்பட்டது.
இரும்பு நட்டு பாய்ந்திருக்கும் ஸ்கேன் ரிப்போர்ட்

`தொற்று காரணமாக அவருக்கு இரண்டு நாள்கள் கழித்தே மீண்டும் அந்த இடத்தில் தையல் போட முடியும்' என்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே, கோபமடைந்த கார்த்திகேயனின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடமும், செவிலியர்களிடமும் கேள்வியெழுப்பினர். 

அப்போதும் அவர்கள் உரிய பதில் அளிக்காமல், அலட்சியப்படுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாப்பாத்தி விசாரணை மேற்கொண்டுவருகிறார். மேலும், விரிவான விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் அரசு மருத்துவமனை தரப்பில்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் 


திருப்பத்தூர் மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment