வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்.. அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டிய டாக்டர் மீது வழக்கு..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, June 05, 2023

சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்.. அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டிய டாக்டர் மீது வழக்கு..!

சென்னையில் இளம்பெண் ஒருவருடன் பழகி திருமணம் ஆசை காட்டி மோசடி செய்த மருத்துவர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை எண்ணூரைச் சேர்ந்த 28 வயது பட்டதாரி பெண்ணுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக சென்ற போது இளம்பெண்ணுக்கு அந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளாடைவில் இருவரும் நெருங்கி பழகத் தொடங்கியுள்ளனர்.


தொடர்ச்சியாக இருவரும் வாட்ஸ்ஆப் மூலம் சாட்டிங், வீடியோ கால், வெளியே லாங் டிரைவ் சென்று வந்த நிலையில் இந்த உறவு காதலாக மாறியுள்ளது. அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக உறுதி மொழி கொடுத்த மருத்துவர் நெருக்கமாக இருக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், சமீப காலமாக பெண்ணிடம் பேசுவதை அந்த மருத்துவர் திடீரென நிறுத்திய நிலையில் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் பெண் விசாரித்ததில் அந்த மருத்துவர் உறவை தொடர நாட்டம் காட்டவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மருத்துவருக்கு தொடர்ந்து அழுத்தம் தந்துள்ளார். அப்போது அந்த மருத்துவர் தன்னிடம் நெருக்கமாக இருந்த அந்தரங்க புகைப்படங்கள் உள்ளன, அதை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என பிளாக்மெயில் செய்துள்ளார்.

விவகாரம் எல்லை மீறி போகவே அந்த பெண் தனது பெற்றோரிடம் இதை கூறியுள்ளார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதற்குள்ளாக அந்த மருத்துவர் வேறு ஒரு பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளம் பெண் தன்னிடம் இருந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள், ஆடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை போலீசாரிடம் ஆதராமாக தந்துள்ளார்.

தன்மீது பழிவந்துவிடக் கூடாது என போலீஸ் விசாரணையை முடக்க மருத்துவர் முயற்சிப்பதாகவும், அதற்காக இதுவரை சுமார் 10 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாகவும் பெண்ணின் தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் புகாரை தொடர்ந்து மருத்துவர் மீது மோசடி, ஏமாற்றுதல், மிரட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சென்னை மாவட்ட செய்திகள் 


சென்னை மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment