இலங்கையில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. இதை கருத்தில்கொண்டு, சிலோன் பெட்ரோலியம் கழகம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.
அதன்படி, இருசக்கர வாகனங்கள் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு ஒருதடவை வரும்போது ரூ.1,000 வரை எரிபொருள் வாங்கலாம். ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள், ரூ.1,500 வரை எரிபொருள் வாங்கிக் கொள்ளலாம். கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ரூ.5 ஆயிரம் வரை வாங்கலாம். பஸ், லாரி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
இதற்கிடையே நாளை முதல் 5 நாட்களுக்கு வர்த்தகத்தை நிறுத்தி வைக்குமாறு மூட இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பங்குதாரர்கள் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணை குழு இயக்குனர் அறிவித்துள்ளார்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
சர்வதேச தமிழ் செய்திகள்
முந்தைய சர்வதேச தமிழ் செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment