குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்திற்கான அறிவிப்பு வரும் 18-ம் தேதி தமிழக பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் " தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டம் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காகிதமில்லாத பட்ஜெட்டாக கணினி தொடுதிரை முறையில் தாக்கல் செய்யப்படும்.
பட்ஜெட் மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்த வேண்டும்? சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின்பு தேரியவரும்..மேலும் வேளாண் பட்ஜெட் என்றைக்கு தாக்கல் செய்யப்படும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பின் தெரிவிக்கப்படும்.
அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும். இதையடுத்டு 2022-23-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2021-22-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் சட்டசபையில் நிதித்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்படும்.
அரசு துறைகளின் மானியக் கோரிக்கைகள் எப்போது நடைபெறும் என்பதும் அலுவல் ஆய்வுக்குழுவின் முடிவுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.. சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு கோரும் சட்ட மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அது குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா என்பது விசாரிக்கப்படும்.
பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சி முழுவதும், சட்டசபையில் இருந்து நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். கடந்த கூட்டத் தொடரை போலவே, இந்த கூட்டத் தொடரிலும் கேள்வி – பதில் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்படும்..” என்று தெரிவித்தார்.
இதனிடையே திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்த இந்த பட்ஜெட் தொடரில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு இந்த முறை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment