வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்.!! உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ் ஏட்டு..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 10, 2022

கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்.!! உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ் ஏட்டு..!

தென்காசியை சேர்ந்த 38 வயது தொழிலாளி ஒருவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில்வேலை செய்து வருகிறார். 35 வயதான இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 


இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும், அப்பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் வாலிபருடனான பழக்கத்தை அந்த பெண் கைவிடவில்லை.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற பெண் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அந்த தொழிலாளி மாயமான மனைவியை மீட்டு தரும்படி குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட குன்னத்தூர் போலீஸ் ஏட்டு முத்துப்பாண்டி அந்த பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்ட போது, அந்த பெண் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்துமுத்துப்பாண்டி அந்த பெண் இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு அந்த பெண் ஒரு வாலிபருடன் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கள்ளக்காதலனுடன் ஓடிவந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை மீட்டு கணவருடன் ஒப்படைக்க அழைத்து சென்றார். ஆனால் இரவு நேரம் ஆகி விட்டதால் அந்த பெண்ணை திருப்பூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு முத்துப்பாண்டி அழைத்து சென்றுள்ளார்.

மேலும் அங்கு வைத்து அந்த பெண்ணை உல்லாசத்துக்கு முத்துப்பாண்டி அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் மறுத்ததுடன் இதுகுறித்து குன்னத்தூர் போலீசில் புகார்தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,மாவட்ட சூப்பிரண்டு சசாங் சாய் போலீஸ் ஏட்டு முத்துப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment