ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால் டுவிட் ஒன்றுக்கும் சித்தார்த் சர்ச்சைக்குரிய வகையில் பதில் பதிவு செய்திருந்தது தற்போது அவரை சிக்கலில் சிக்க வைத்துள்ளது.
நடிகர் சித்தார்த், விமர்சனம் என்ற பெயரில் அவ்வப்போது அநாகரீகமான வகையில், ட்விட்டரில் பதிவிட்டு சிக்கிக் கொள்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே, விமர்சனம் என்ற பெயரில், அநாகரீமான வகையில் பதிவிடுவதால், அவ்வப்போது சர்ச்சையில் மாட்டிக் கொள்கிறார். அந்த வகையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால் டுவிட் ஒன்றுக்கும் சித்தார்த் சர்ச்சைக்குரிய வகையில் பதில் பதிவு செய்திருந்தது தற்போது அவரை சிக்கலில் சிக்க வைத்துள்ளது.
எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டனம் செய்கிறேன் என ஒலிம்பிக் பதக்கம் வாங்கிய சாய்னா நெய்வால் (Saina Nehwal) ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதிலை பதிவு செய்த நடிகர் சித்தார்த், பெண்களை கொச்சை படுத்தும் வகையில் பதிலளித்திருந்தார்.
Subtle cock champion of the world... Thank God we have protectors of India. 🙏🏽
Shame on you #Rihanna https://t.co/FpIJjl1Gxz
இதை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்ட தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதி, விளையாட்டு வீராங்கணை சாய்னா நேவாலுக்கு, ஆட்சேபிக்கத்தக்க வகையில், பெண்களை அவமானபடுத்தும் வகையில் வெறுப்பு ட்வீட் செய்ததற்காக நடிகர் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment