இராமாபுரத்தில் தன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம் என இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே இராமாபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மகன் அர்ஜூன் (வயது 23). பெற்றோர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில் அர்ஜூன் தனியாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் தனது வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அர்ஜூனை பார்க்க வந்த அவரது நண்பர் நீண்ட நேரம் கதவு தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். அப்போது அர்ஜூன் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து இராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் சடலமாக தொங்கிய அர்ஜூனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது.
கடிதத்தில், "எனக்கு வாழ பிடிக்கல எல்லோரும் இருந்து நான் தனியா தான் ஃபீல் பண்றேன்.என்னால வாழ முடியல. என் வாழ்க்கை இப்படியே இருக்கு. அதனால தான் நான் சாக போறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இப்படிக்கு நான்" எனவும் மேலும் என்னுடைய கடைசி ஆசை என் உடலை போஸ்ட்மார்டம் செய்ய வேண்டாம் உடலை பெற்றோரிடம் ஒப்படையுங்கள் என எழுதி வைத்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது .
தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், " அர்ஜூனுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாதது தெரியவந்துள்ளது. இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அர்ஜூனின் காதலி நேற்று மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அதன்பின்னரே இவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அர்ஜூனின் செல்போனை கைப்பற்றிய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு:
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
இராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
முந்தைய இராமநாதபுரம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment