வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இனி வாகன நிறுத்தம் இல்லாத மண்டபம், திரையங்கை செயல்படவிடமாட்டேன் - அமைச்சர் துரைமுருகன்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 04, 2022

இனி வாகன நிறுத்தம் இல்லாத மண்டபம், திரையங்கை செயல்படவிடமாட்டேன் - அமைச்சர் துரைமுருகன்..!

'இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்' கீழ் உள்ள மையங்களுக்கான துவக்க விழா இன்று வேலூர் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.  


கொரோனா காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில் தமிழகத்தில் 'இல்லம் தேடி கல்வி' எனும் திட்டத்தை கடந்த மாதம் தமிழக முதவர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தில் 'இல்லம் தேடி கல்வி திட்டத்தின்' கீழ் உள்ள மையங்களுக்கான திறப்பு விழா காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மக்களுக்கான திட்டங்களை துவக்கும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் தான் வைக்க வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிகளை கிராமங்களுக்கு மத்தியில் வைத்தால் செய்தி நேரடியாகவும் உடனடியாகவும் மக்களை சென்று சேரும். 

அதை தவிர்த்து இது போன்ற மண்டபங்களில் வைப்பதால் யாருக்கு என்ன பயன்? திட்டம் எப்படி போய் சேரும்? எது எது எங்க எங்க இருக்க வேண்டுமோ அங்கங்குதான் இருக்க வேண்டும் என்றார்.     
மேலும் அவர் பேசுகையில், காட்பாடி பகுதியில் புதிது புதிதாக திருமண மண்டபங்கள், திரையரங்குள் திறக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கு போதிய வாகன நிறுத்தும் இடம் இல்லாததால் சாலையில் வாகனங்களை விடுகிறார்கள், இதனால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. போதிய வாகன நிறுத்தம் இல்லாத திருமண மண்டபம் மற்றும் திரையரங்கிற்க்கு மாவட்ட ஆட்சியர் எப்படி அனுமதி கொடுத்தார்? நிறுத்தம் இல்லாத கட்டிடங்களை செயல்பட அனுமதிக்க கூடாது. ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நானே நடவடிக்கை எடுப்பேன்.     

காட்பாடி பகுதியில் எனக்கே தெரியாமல் புதிதாக ஒரு திரையரங்கம் முழைத்து இருக்கிறது, ஏற்கனவே அப்பகுதியில் வாகன நெரிசல் இருக்கக் கூடிய நிலையில் மேலும் இது போன்று ஒரு திரையரங்கு வருவதனால் அப்பகுதியில் கூடுதலாக வாகன நெரிசல் ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரான நீங்கள் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனால், இது குறித்து நிச்சயமாக நான் நடவடிக்கை எடுப்பேன். அந்த திரையரங்கத்திற்கு எதன் அடிப்படையில் நீங்கள் (மாவட்ட ஆட்சியர்) அனுமதி அளித்தீர்கள் என்பது போன்ற முழு விவரத்தை எனக்கு அளிக்க வேண்டும் என்றார்.  இது காட்பாடி தொகுதி, என் கண் இமையில் இருந்து ஒரு பொருளும் தப்பிவிட முடியாது என்று ஆட்சியரிடம் கடிந்து கூறினார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலூர் மாவட்ட செய்திகள் 


முந்தைய வேலூர் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment