கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை அடுத்த முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா (37).
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருக்கும் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், பாபு கடந்த ஒரு வருடமாக வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் லலிதாவின் வீட்டிற்கு வந்த பாபு குடும்பம் நடத்தி வரும் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவரை வீட்டை அடித்து நொறுக்கி தாக்கி வீட்டை விட்டு வெளியேறச் சொன்னதாக தெரிகிறது.
இதில், படுகாயமடைந்த லலிதா குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் குளச்சல் மகளிர் காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததோடு தினம்தோறும் காவல் நிலையத்தில் காத்திருந்தும் நடவடிக்கை இல்லாததால் லலிதா, தனது இரு மகள்களுடன் கதறி அழுது முதலமைச்சர் ஐயா நடவடிக்கை எடுங்க எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/*Sex*/📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
சமூக சீரழிவு செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment