மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகேயுள்ள சிரூர் பகுதிக்கு கடந்த 7ம் தேதி மினி பஸ் ஒன்றில் வகோலி பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என சிலர் சுற்றுலா சென்றனர்.
அந்த பஸ்சை 40 வயது ஆண் டிரைவர் ஒருவர் ஓட்டிச் சென்றார். மறுநாள் அங்கிருந்து திரும்பும் வழியில் பஸ் டிரைவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு ஸ்டீயரிங்கிலேயே சாய்ந்தார். இதையறிந்த பிக்னிக் ஏற்பாட்டாளர் ஆஷா வக்மரே என்ற பெண், பாய்ந்து சென்று டிரைவரிடம் இருந்து ஸ்டீயரிங்கை பிடித்து தான் இயக்க ஆரம்பித்தார்.
இதை பார்த்து பஸ்சில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர். காரை மட்டும் இயக்க தெரிந்த ஆஷா முதல்முறையாக பஸ்சை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கி சென்றார். கனேகான் கல்சா பகுதியை அடைந்ததும் வலிப்பு நோய் பாதித்த டிரைவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து வேறு பஸ் டிரைவர் வந்து சிக்ராபூர் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட டிரைவரை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து சுற்றுலா சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகளை மாற்று டிரைவர் வகோலிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றார். பஸ்சை சாமர்த்தியமாக இயக்கிய ஆஷாவை பொதுமக்கள் வாழ்த்தியும் பாராட்டியும் வருகின்றனர். ஆஷா பஸ்சை இயக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment