சாலையில் சுற்றித் திரியும் மாடுகளினால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இதனையடுத்து சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000/- அபராதம் விதிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.
ஊராட்சி வாரியாக கால்நடை பட்டிகளை நிறுவி கால்நடைகளை அதில் அடைத்து அபராதம் பெற்றபின் உரிமையாளரிடம் ஒப்படைக்க இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாளுக்கு மேல் ஆகியும் உரிமையாளர் எவரும் வரவில்லை எனில் காட்டாங்கொளத்தூர் அருகேயுள்ள கொண்டமங்கலம் பகுதியில் உள்ள மாவட்ட அளவிலான பட்டிக்கு மாடுகள் மாற்றம் செய்யப்படும் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்
முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment