கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று கர்நாடக மாநில ஹசன் பகுதியில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், புரட்சித்தாய் சின்னம்மா சசிகலாவின் ஆதரவாளர் தேனி கர்ணன் இது குறித்து தனது அதிரடியான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
"தீவிரவாதி போல தேடுதல் வேட்டை நடத்தி ராஜேந்திர பாலாஜியை கைது செய்து விட்டார்கள். இந்த செய்தியை மட்டும் அடிக்கடி போட்டு காட்டுகிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக தலைமைக்கு பல ஆயிரம் கோடிகளை வசூல் செய்து தருகிறார்.
ஏற்கனவே லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கிய ஒருவருக்கு ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையை கொடுத்து திமுக அழகு பார்த்தது. வேறு கட்சியில் இருந்து வந்தவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது பாசத்தால் அல்ல. அவரால் அதிகமாக வசூல் செய்து கொடுக்க முடியும் என்பதால் தான்.
இனியும் மக்களை இந்த அரசு ஏமாற்ற முடியாது. கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் சிக்கி இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீதோ, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மீதோ நடவடிக்கை எடுத்திருந்தால் பாராட்டி இருக்கலாம்.
ஆனால் பல ஆயிரம் கோடிகளை வாரி சுருட்டி ரெய்டில் சிக்கியவர்களை விட்டுவிட்டு 3 கோடி ரூபாய் ஊழல் என்பதற்காக ராஜேந்திர பாலாஜியை கைது செய்வது என்பது ஏற்க முடியாத ஒன்று. மக்களை ஏமாற்றும் வேலை. முடிந்தால் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி போன்ற லஞ்சத்தி ஊறியவர்களை கைது செய்து காட்டுங்கள்." என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவரும் விருதுநகர் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவ.15-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
அன்று, அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ராஜேந்திரபாலாஜியிடம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி குறித்து தெரிவிக்கப்பட்டதும் அங்கிருந்து சென்ற அவர் தலைமறைவானார்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் இன்று அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரவிருந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில ஹசன் பகுதியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
அரசியல் செய்திகள்
முந்தைய அரசியல் செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment