அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குறிச்சி குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஐந்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து பள்ளியில் 6, 7,8 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் அறிவியல் ஆசிரியர் ராஜமாணிக்கம் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து குறிச்சி குளம் கிராம பொதுமக்கள், இன்று ஆசிரியர் பள்ளிக்கு வரும்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதைப் பற்றி கேட்டபோது உடனடியாக இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பித்து ஓடிவிட்டார்.
தகவலறிந்து வந்த குவாகம் போலீசார் மற்றும் அனைத்து அரியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி டிஎஸ்பி மதன் குமார் உள்ளிட்டோர் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பள்ளி மற்றும் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தப்பி ஓடி தலைமறைவான ஆசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
சமூக சீரழிவு செய்திகள்
முந்தைய சமூக சீரழவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment