காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
மதுரை அருகே அழகர் கோவில் செல்லும் சாலையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மாரிதாஸ் வீட்டுக்கு சென்று கைது செய்ய சென்ற போலீசாரிடம் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர் வாக்குவாதம் செய்தனர்.
பின்பு போலீசாரை கைது செய்ய விடாமல் தடுத்தனர். அதையும் மீறி வீட்டிற்குள் நுழைந்த போலீசார் மாரிதாஸை கைது செய்தனர். பின்னர் அவரை அருகேயுள்ள புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காவல்நிலையம் முன்பு பாஜகவினர் அதிக அளவில் கூடி வருவதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment