பல பெண்களை ஏமாற்றியதாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகனின் மகள் பூவழகி (வயது 22). இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனக்கும், குன்னம் தாலுகா, பென்னக்கோணம் கிராமத்தை சேர்ந்த பரமசிவத்தின் மகன் பால்ராசுவுக்கும் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் பால்ராசு பல பெண்களுடன் பழகி திருமணம் செய்து குடும்பம் நடத்தியதாக தெரியவந்தது. மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை எனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து என்னிடம் எனது கணவர் எங்கே என்று விசாரித்தனர். எதற்கு என்று கேட்டதற்கு போலீசார் என்னுடைய கணவர் ஒரு சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாகவும், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருவதாகவும் கூறினர். எனவே என்னையும், பல பெண்களையும் ஏமாற்றிய பால்ராசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பால்ராசுவை வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment