தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஆம்பர்பேட் பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீனிவாஸ், விஜயலக்ஷ்மி தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீனிவாஸ் வீடு வீடாகச் சென்று புடவை மற்றும் பிளவுஸ் துணிகளை வியாபாரம் செய்து வருபவர். வீட்டிலிருந்தும் துணிகளை தைத்துக் கொடுத்து வந்துள்ளார்.
அவர் தனது மனைவிக்காக நேற்று பிளவுஸ் ஒன்றை தைத்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த பிளவுஸ் அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. கணவரிடம் பிளவுஸை தன்னுடைய விருப்பப்படி மீண்டும் தைத்து தருமாறு விஜயலக்ஷ்மி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கணவர் மறுப்பு தெரிவிக்கவே மனமுடைந்த விஜயலக்ஷ்மி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய விருப்பப்படி கணவன் பிளவுஸ் தைத்து கொடுக்காததால் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment