வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விளக்கு திரியில் உள்ள பலன்களின் இரகசியம்..? எந்த திரியில் விளக்கேற்றினால் என்ன பலன்..?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 18, 2021

விளக்கு திரியில் உள்ள பலன்களின் இரகசியம்..? எந்த திரியில் விளக்கேற்றினால் என்ன பலன்..?

வீட்டில் பூஜைக்கு நாம் ஏற்றும் விளக்கில் வித்தியாசமான திரிகள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வகையான திரியும் ஒவ்வொரு பலனைக் கொடுக்கிறது. அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.


இலவம் பஞ்சுத்திரி - சுகம் தரும்.

தாமரைத்தண்டு திரி - முன்வினை நீக்கும். செல்வம் சேரும். திருமகள் அருள் உண்டாகும்.

வாழைத்தண்டு திரி - மக்கட்பேறு உண்டாகும். மன அமைதி உண்டாகும். குடும்ப அமைதி உண்டாகும். தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும். குழந்தைப்பேறு உண்டாகும்.

வெள்ளெருக்கு திரி - செய்வினை நீங்கும். ஆயுள் நீடிக்கும். குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும்.

பருத்தி பஞ்சுத்திரி - தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும். வம்சம் விருத்தியாகும்.

வெள்ளைத்துணி திரி - அனைத்து நலங்களும் உண்டாகும்.

சிவப்பு துணி திரி – திருமணத்தடை நீக்கும். மக்கட் பேறு உண்டாகும்.

மஞ்சள் துணி திரி - எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். அம்பிகையின் அருள் உண்டாகும். வியாதிகள் நீங்கும். செய்வினை நீங்கும். எதிரிகள் பயம் நீங்கும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும். மங்களம் உண்டாகும்.

பட்டுத்துணி திரி – எல்லா சுபங்களும் உண்டாகும்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment