வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செங்கல்பட்டில் அரசு பேருந்து நடத்துனரை காவலர் அடித்ததால் பரபரப்பு | பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 07, 2021

செங்கல்பட்டில் அரசு பேருந்து நடத்துனரை காவலர் அடித்ததால் பரபரப்பு | பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு பேருந்து நிலையத்திருந்து மகாபலிபுரம் நோக்கி செல்லும் 508 பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வரும் முருகேசன் என்பவர் இன்று காலை 10.30 மணியளவில் பேருந்தில் உள்ள பயனிகளிடம் பயனச்சீட்டு அளித்த போது அதில் சீருடை அணியாமல் அமர்ந்திருந்த அரிதாஸ் என்னும் ஆயுதப்படை காவலரிடம் பயனச்சீட்டு வாங்கும் படி கேட்டுள்ளார். 


இதற்கு அரிதாஸ் தான் போலீஸ் என்றும் பயனச்சீட்டு எடுக்க மாட்டேன் எனவும் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து வாரண்ட் அல்லது தங்களின் காவலர் அடையாள அட்டையை காண்பிக்கும் படி நடத்துனர் முருகேசன் காவலரிடம் கேட்டதற்கு, காவலர் அரிதாஸ் தன்னிடம் வாரண்ட் ஏதும் இல்லையென்றும் மேலும் அடையாள அட்டையை காண்பிக்க மறுத்த நிலையில் நடத்துனர் முருகேசன் காவலரை பேருந்தில் இருந்து கீழே இறக்கும் படி கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் காவலர் அரிதஸ் நடத்துனர் முருகேசனை பேருந்து பயனிகள் முன்னிலையில் கன்னத்திலும், தலையிலும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து நடத்துனர் முருகேசன் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள காவலர் உதவி நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இந்த நிலையில் தகவல் அறிந்த அரசு போக்குவரத்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர் பேருந்துகளை இயக்க மறுத்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்தின் எதிரேயுள்ள ஜி எஸ் டி சாலையின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி பேராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பச்சாரே சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பேருந்துகள் இயக்கினர். 


இதனால் செங்கல்பட்டு ஜி எஸ் டி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment