அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் சோதனை நடைபெறுகிறது. மேலும், நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதியில் 69க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே எம்.ஆர் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய நிலையில், தொடர்ந்து தற்போது தங்கமணி வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கமணியின் மகன் வீட்டிலும் ரெட்டு
பாய்ந்தது சொத்துக்குவிப்பு வழக்கு | அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் ரெய்டு
No comments:
Post a Comment