வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வண்டலூர் மேம்பாலம் அருகே மயங்கிய நிலையில் இருந்த முதியவருக்கு உதவிய காவலர் | Vandalur Police News | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 04, 2021

வண்டலூர் மேம்பாலம் அருகே மயங்கிய நிலையில் இருந்த முதியவருக்கு உதவிய காவலர் | Vandalur Police News | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மேம்பாலம் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்துகொண்டு இருந்தார். அவ்வழியாக சென்ற காவலர் சந்தோஷ் என்பவர் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து விசாரித்த போது, அவர் திருச்சியை அடுத்த கீரனுர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், தனது மகளுடன் படப்பையில் தங்கி வந்துள்ளார் என்றும், தனது மகளுடன் ஏற்ப்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்தாகவும் தெரிந்தது. பேருந்தில் செல்ல பணம் இல்லாமல் நடந்து சென்றதாகவும் அந்த முதியவர் கூறியுள்ளார்.


இதையடுத்து காவலர் சந்தோஷ்  அவ்வழியாக வந்த வாகனஓட்டிகளான சரத்குமார் மற்றும் திவாகர் ஆகியோரின் Googlepay-விற்கு ரூ.200/-னை அனுப்பி அதனை பணமாக பெற்று அந்த முதியவரிடம் கொடுத்து வண்டலூர் பேருந்து நிலையம் அழைத்துச்சென்றார்.

இந்த நிகழ்வினை பொதுமக்கள் பலர் முகநூலில் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர். இவர் ஆவடி காவல் தலைமை அலுவலகத்தில் 2-ம் நிலை  பெட்டாலியன் காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இந்து கல்லூரி இரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளார். காவலர் சந்தோஷ்  மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





Recent Posts Widget

No comments:

Post a Comment