செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அடிவாரத்தில், 12 ஏக்கர் பரப்பளவில் சங்குதீர்த்த குளம் அமைந்துள்ளது.
பிரசித்திபெற்ற இக்கோயில் சங்குதீர்த்த குளத்தின் நீர்வரத்து மழைக்காலத்தின்போது, மலையில் இருந்து மூலிகை வளத்துடன் அடிவாரத்துக்கு வரும் மழைநீரை வடிகட்டி, சுத்தமான நீராக சங்குதீர்த்த குளத்துக்கு செல்லும் வகையில் 4 கால்வாய்கள் அமைந்துள்ளன.
ஆனால், கால்வாய்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், கனமழை பெய்துவரும் நிலையிலும் குளத்துக்கு நீர்வரத்து இல்லை என நீர்நிலை ஆர்வலர்களும், பக்தர்களும் கடந்த சில ஆண்டுகளாக வேதனை தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து துறைரீதியாக புகார் மனுக்களும் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளத்தை சுற்றியுள்ள நீர் வரத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் குளத்திற்கு நீர் வரத்துக்கு வழிவகை செய்தனர்.
இதனை தொடர்ந்து அண்மையில் பெய்த மழையின் காரணமாக சங்குதீர்த்த குளம் முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் தற்போதுதான் நீண்ட வருடங்களுக்குப் பிறகு குளம் முழுமையாக நிரம்பியுள்ளதாகவும், குளம் பாரம்பரியமாக தற்போது காட்சியளிப்பதாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment