தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை மாலை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். இன்று காலை திருச்சிக்கு வந்த சந்திசேகர ராவ் அங்கிருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் அவருக்கு கோயில் யானை மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவிலில் பலத்த பாதுகாப்பிற்கு இடையே குடும்பத்தோடு சென்று வழிபாடு நடத்தி, சிறப்பு பூஜை செய்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இவருக்கு சிறப்பு மரியாதை வழங்கி வரவேற்பு கொடுத்தார். பின்னர் கோவிலுக்கு உள்ளே நிர்வாகிகள் முதல்வர் சந்திரசேகரராவிற்கு தனி மரியாதை அளித்தனர். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திர சேகர ராவ், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கோவிலில் வழிபாடு நடத்தினேன். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தமிழ்நாடு வந்துள்ளேன். நாளை மாலை சென்னையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருடன் சந்தித்து பல்வேறு விஷயங்களை ஆலோசிக்க உள்ளேன், என்று சந்திர சேகர ராவ் தனது செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
தேசிய அரசியல், 2 மாநில உறவு குறித்து இரண்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கோதாவரி காவிரி நதி நீர் இணைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் முதல்வர் சந்திசேகர ராவிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நதிகள் இணைப்பை தமிழ்நாடு அரசு ஆதரித்து வருகிறது. இதற்கு ஆந்திரா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கர்நாடகா மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கோதாவரி நதியிலிருந்து ஆண்டுதோறும் 247 ஆயிரம் மில்லியன் கன அடி வீணாகிறது. கடலில் கலந்து இந்த நீர் வீணாகிறது. இதை நாகார்ஜுன சாகர் அணை - சோமசீலா அணை - காவிரி வரை பைப்லைன் மூலமாக இணைத்தால் தென் மாநிலங்களுக்கு தலா 80-100 டிஎம்சி நீர் கூடுதலாக கிடைக்கும். தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 80 டிஎம்சி கிடைக்கும். இதனால் தெலுங்கானாவை இந்த திட்டத்திற்கு சம்மதிக்கவைக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்வார் என்று கருதப்படுகிறது.
அதேபோல் தேசிய அரசியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முயற்சியால் மூன்றாவது அணி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக இல்லாத கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை நடக்கும் சந்திப்பில் இரண்டு முதல்வர்களும் தேசிய அளவிலான மூன்றாவது குறித்தும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து வரும் நிலையில், நடக்வுள்ள கூட்டத்தில் இதை பற்றி ஆலோசிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
No comments:
Post a Comment