செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஒழுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவன் மதுராந்தகம் இந்து மேல்நிலை ஆண்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இன்று வழக்கம்போல் பள்ளிக்கு அரசு பேருந்தில் வரும்போது பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக படியில் தொங்கி வந்துள்ளனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்துகொண்டிருந்தபோது அய்யனார் கோயில் என்ற பகுதியில் மாணவன் கை நழுவி சாலையில் விழுந்துள்ளார்.
எனினும் மாணவன் அதிர்ஷ்டமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவனை மீட்ட பொதுமக்கள் உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
பள்ளி நேரங்களில் கூட்ட நெரிசலால் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி செல்கின்றனர். எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்து இயக்க பொதுமக்கள் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
No comments:
Post a Comment