திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த 21.11.2021 அன்று பணியிலிருக்கும்போது கொலை செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே இச்சம்பவமானது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சார்பாக பொன்னேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா ஆனிகிருஸ்டி பூமிநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், ரூ.5,50,600/- னை, 30.11.2021ம் தேதி இரவு அவரது திருச்சி இல்லத்தில் இறந்த பூமிநாதன் அவர்களின் மனைவி மற்றும் மகனிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment