பால்நெல்லூர் கிராமசபை கூட்டத்தில் தேர்தலில் தோல்வியுற்ற ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு. போலீசார் குவிப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பால்நெல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நேரு தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக ஶ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, துணை தலைவர் மாலதி போஸ்கோ ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவரை எதிர்த்து போட்டியிட்ட நபரின் ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பி வாய் தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஶ்ரீபெரும்புதூர் போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
பின்பு கூட்டத்தின் முடிவில் ஊராட்சியில் மேற்கொள்ள உள்ள சுகாதாரப்பணிகள், சாலை பணிகள், சிதிலமடைந்த கட்டிடங்களை சீரமைப்பு பணிகள், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக தீர்மானங்கள் கிராம மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment