வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திடீரென பல்டி அடித்த பெண் சாமியார்..! நான் சாமியாரே கிடையாது.! பதறும் அன்னபூரணி...!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 29, 2021

திடீரென பல்டி அடித்த பெண் சாமியார்..! நான் சாமியாரே கிடையாது.! பதறும் அன்னபூரணி...!!

சமீபத்தில் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் நபராக உள்ளார் அன்னபூரணி அரசு என்ற பெண். தன்னை அம்மனின் அவதாரமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு வரும் இவர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றை குறிப்பிட்டு, இவர் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையிலும் இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும் செயல்படுகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்தது. அந்தக் குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாக, அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்து அமைப்பினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இன்று காலை அன்னபூரணி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞர்களுடன் சென்று தன் தொடர்பான புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், "நான், ‘இயற்கை ஒலி’ என்ற பெயரில் ஆன்மிக தீட்சை கொடுத்து, ஆன்மிக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். 

கடந்த 19-12-2021 அன்று செங்கல்பட்டில் ஆன்மிக பயிற்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல முறையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 24-12-2021 அன்று என்னையும் எனது ஆன்மிக சேவையையும் தவறாக சித்தரித்து யூட்யூப் சேனலொன்றில் வதந்தி பரப்பட்டது.

மேலும் எனது கணவர் மாரடைப்பால் இறந்ததை மர்ம மரணம், இறப்பில் சந்தேகம் என தவறாக வதந்தி பரப்புகிறார்கள். அதை தொடர்ந்து பல்வேறு யூட்யூப் சேனல்களும் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தொடர்ந்து என் மீதும் எனது ஆன்மிக சேவை மீதும் எனது சீடர்கள் குறிந்தும் கொச்சைப்படுத்தி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

இது எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது. பலர் எனக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். ‘நீ ஆன்மிக சேவையில் ஈடுபடக் கூடாது’ என்றும், ‘மீறி செயல்பட்டால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்’ என்றும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். வாட்ஸ்அப் மூலமும் மிரட்டல்கள் வருகிறது. 

இதனால் எனது ஆன்மிக சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனக்கும் எனது சீடர்கள் உயிருக்கும் எந்நேரமும் அச்சுறுத்தலும் ஆபத்தும் இருந்து வருகிறது. எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சென்னை மாவட்ட செய்திகள் 


முந்தைய சென்னை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment