இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நேற்று விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி, பிபின் ராவத், அவரின் மனைவி மிதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர்.
அவரின் மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. அவரின் இறுதிசடங்கு நாளை டெல்லியில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுவதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி நிமிட வீடியோ வெளியாகி உள்ளது.. இந்த வீடியோவை சுற்றுலா பயணிகள் சிலர் தங்களின் செல்போனில் படம்பிடித்ததாக கூறப்படுகிறது..
அந்த வீடியோவில் பனிமூட்டத்திற்குள் மறையும் காட்சி இடம்பெற்றுள்ளது.. ஹெலிகாப்டர் கீழே விழுந்துருச்சா என்று பேசுவதும் காட்சியில் உள்ளது.. எனினும் இந்த வீடியோவை இந்திய விமானப்படை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது என்ன?
— Gunalan Lavanyan (@gunalancity) December 9, 2021
புதிய வீடியோ வெளியானது?
எடுத்தது யார்? - விசாரணை#CoonoorCrash #HelicopterCrash #helicopter #helicopter_crash #Helicoptercrashes #BipinRawat pic.twitter.com/PX0HDkieLE
இதனிடையே விபத்து நடந்த இடம் முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.. மேலும் அந்த இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. தடங்களை பாதுகாக்கும் நோக்கில், விபத்து நடந்த இடத்தில் காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட 600 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் தடங்களை சேகரிக்கும் பணியை ராணுவ நுண்ணறிவு பிரிவினர் வீடியோ பதிவு செய்து வருகின்றனர்..
விபத்து நடந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. மேலும் இதர உதிரி பாகங்களை சேகரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
No comments:
Post a Comment