வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டியூசன் சென்ற சிறுமி பலாத்காரம்.. சிறுவன் வெறிச்செயல்! | School Girl Abuse in Tuition Centre | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 11, 2021

டியூசன் சென்ற சிறுமி பலாத்காரம்.. சிறுவன் வெறிச்செயல்! | School Girl Abuse in Tuition Centre | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி சென்ற தந்தை அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் சிறுமியை மருந்து கடையில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது மருந்துக் கடையின் ஷட்டர் பூட்டப்பட்டு இருந்துள்ளது.


ஆனாலும் அந்த கடையின் விளக்குகள் வாசலில் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தந்தை, ஷட்டரை தட்டியுள்ளார். அப்போது 17 வயது சிறுவன் கடைக்குள் இருந்தபடி ஷட்டரை திறந்துள்ளான். கடைக்குள் தனது மகள் சுயநினைவின்றி, ஆடைகள் களைந்து இருப்பதை சிறுமியின் தந்தை கவனித்துள்ளார்.


இதனால் பதறிப்போன அவர் போலீசில் புகார் கொடுக்க அந்த 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு வீடு திரும்பிய சிறுமியை வலுக்கட்டாயமாக மருந்து கடைக்குள் அழைத்து சென்று சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment