தமிழக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் முதியவர்களின் கைவிரல் ரேகை பதிவு வைக்க முடியவில்லை. இது தொடர்பாக தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்ட்டுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி நிறைய முறைகேடுகள் நடந்து வருவதாக கூறி, புதியதாக பயோமெட்ரிக் கருவியின் மூலம் குடும்ப தலைவர்கள் அல்லது உறுப்பினர்களின் கைவிரல் பதிவு செய்யப்பட்டது. அதை பயன்படுத்தி ரேஷன் கார்டுகளுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் முறைகேடுகள் குறைந்துள்ளது.
இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக முதியோருக்கு கைவிரல் ரேகை பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக வேறு ஒருவர் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக கைரேகை பதிவு வைக்க முடியாத முதியவர்கள், உரிய ரேஷன் கடைகளுக்கு சென்று படிவத்தை பெற்று விண்ணப்பிக்க முடியும். இதனை தற்போது தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மொத்தம் 2700 ஸ்மார்ட் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவுக்கு விலக்கு கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். உங்கள் வீட்டிலும் யாருக்காவது கைரேகை வைப்பதில் சிரமம் இருந்தால் அவர்களுக்கு உரிய விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் கைரேகை வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
நியாய விலை கடை செய்திகள்
முந்தைய நியாய விலை கடை செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment