கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில் நேற்று (டிசம்பர் 18ம் தேதி) அபூர்வ உடுப்பு ஒன்று பிடிபட்டது. அதை வனத்துறையினர் பிடித்து பாதுகாப்பாக பூதப்பாண்டி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில் குடியிருப்பு பகுதியில் அபூர்வ வகை விலங்கு ஒன்று அங்கும் இங்குமாக ஊர்ந்து செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கன்னியாகுமரி போலீசார் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர் பிரவீன் சம்பவ இடத்துக்கு வந்து சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது வீட்டின் மதிற்ச்சுவர் மேலும் இது சென்ற விலங்கை பிடித்தார். அப்போதுதான் தெரிந்தது அது அபூர்வ வகை உடும்பு என தெரியவந்தது. அந்த அபூர்வ வகை உடும்பானது சுமார் 4 கிலோ இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அந்த அபூர்வ வகை வனவிலங்கான உடும்பினை மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் நாகர்கோவில் வன அலுவலகத்திற்கு கொண்டு சென்று பூதப்பாண்டியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விடப்பட்டது.
No comments:
Post a Comment