வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா | Pulavarvilari Mutharamman Temple Karthigai Festival 2021 | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 03, 2021

புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா | Pulavarvilari Mutharamman Temple Karthigai Festival 2021 | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


நாகர்கோவில் புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா வருகிற 5 - ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு அபிஷே கம் , 8 மணிக்கு தீபாராதனை , இரவு 8 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது. 

விழாவில் முதல்நாள் பகல் 11. 30 மணிக்கு சிறப்பு பூஜை , 12 மணிக்கு அன்னதானம் , மாலை 6 மணிக்கு லலிதா சகஸ்ர நாம மாத்ரு பூஜை , 6 - ந்தேதி மாலை 6 மணிக்கு பக்தி பஜனை , 6. 30 மணிக்கு திருவிளக்கு பூஜை , 7 - ந்தேதி காலை 8. 30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் , 9 மணிக்கு அலங்கார தீபாராதனை , மாலை 4. 30 மணிக்கு கொலுமேளம் , நையாண்டிமேளம் , 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி அன்னையை வலம் வருதல் , தொடர்ந்து அம்பாள் வாகனத்தில் நகர்வலம் புறப்படுதல் , இரவு 11 மணிக்கு தீபாராதனை , நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது.

விழாவின் நிறைவு நாளான 8 - ந்தேதி அதிகாலை 5 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment