கர்நாடக மாநிலம் மங்களூருவில் கார் டிரைவராக பணியாற்றி வந்தவர் நாகேஸ். இவருக்கு விஜயலட்சுமி என்பருடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். கணவர், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று நாகேஷின் வீட்டுக் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர்.
கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது நாகேஷ் தூக்கில் சடலமாக தொங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது விஜயலட்சுமி மற்றும் அவரது இரு குழந்தைகளும் இறந்து கிடந்தனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
அவர்களது வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் விஜயலட்சுமியை ஒரு பெண் மதம் மாற்ற முயற்சிப்பதாகவும், அதனால் மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்வதாக நாகேஷ் எழுதியிருப்பதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விஜயலட்சுமியை மதம் மாற்ற முயற்சித்ததாக கூறப்படும் பெண்ணையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment