சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் ரசாக்(30), இவர் கடந்த 29ம் தேதி காலை 10. 30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் ஷேக் உமர், யாகூப் மற்றும் ரசாக் ஆகிய மூவரும் யாகூப்பை பல்லாவரத்தில் இறக்கிவிட சென்றுள்ளனர். அப்போது நாகல்கேணி, பெரியார் நகர் சந்திப்பில் அவர்களை இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு மூன்று பேர் வழிமறித்து ஷேக் யார் என்று கேட்டு வண்டியை விட்டு கீழே இறங்கும்படி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
உடனே மோகன் என்பவர் ஷேக்கை கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது ரசாக் தடுக்க முற்பட்ட போது கையில் வெட்டு விழுந்தது. இதில் இடது கை மணிக்கட்டில் இரு இடத்திலும், இடதுபக்க கழுத்திலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ரசாக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 15 தையல் போடப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சங்கர்நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிய நிலையில் அனகாபுத்தூர் அருகே தலைமறைவாக இருந்த பம்மலை சேர்ந்த மதன்(எ) குள்ளமதன்(20), மோகன்ராஜ்(23), விஜய்(25), ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, அடிதடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைதானவர்கள் பலரை பணம் கேட்டு மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்பதும் பணம் தராதவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதும் தெரியவந்தது.
கைது செய்யும் சென்ற போது போலீசாரை கண்டு தப்பியோடி கீழே விழுந்ததில் மதனுக்கு வலது கையும், மோகனிற்கு இடது கால் எலும்பும் முறிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment