குன்னூரில் நடந்த விபத்தில் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணம் அடைந்திருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள், வீரர்களும் உயிரிழந்திருப்பது தேசத்திற்கும் பெரும் பேரிழப்பாகும்.
பிபின் ராவத் ராணுவத்தில் பல்வேறு பதவிகளில் இருந்து சிறப்பாக பணியாற்றிய பெருமைக்குரியவர். அவர் தேசத்திற்காக செய்த தியாகத்தையும், சேவையையும் வருங்கால சந்ததிகள் உணர்வார்கள்.
அவருடைய ஆன்மா சாந்தி அடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மோட்சதீபம் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
No comments:
Post a Comment