சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் அந்த தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்த போது
திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்படும் நெல் மூடைகள் மழையால் வீணாக போவதாக எழும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு
தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் மழையால் நெல் மூடைகள் வீணாகாமல் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதுவரையில் கொள்முதல் மையங்களில் பெறப்படும் நெல் மூடைகளை பாதுகாத்து வைக்காமல் உடனடியாக நெல்லை அரைவை மையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 3 லட்சம் மெட்ரிக் டன் இந்த ஆண்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தினந்தோறும் 500 மெட்ரிக் டன் அரைக்கும் வகையில் (ppp) திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தனியார் கூட்டமைப்பு சார்பில் இயந்திரங்கள் நிறுவப்பட்டு நெல் அரைக்கப்படும்.
இதேபோல் பைலட் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் நெல் அரைப்பதற்கான ஏற்பாடுகளும் விரைவில் தொடங்க தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மதுரையில் 25 கொள்முதல் மையங்களில் 24 கொள்முதல் மையங்கள் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் செயல்பட்டு வருகிறது.
இங்கு பெறப்படும் நெல் மூடைகள் பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது மேலும் மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை வைகை மற்றும் முல்லை பெரியாறு பாசனத்தின் மூலம் அதிகமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது இதனால் விளைவிக்கக்கூடிய நெல் மூடைகளை பாதுகாக்கும் வண்ணம் மதுரையில் கூடுதலாக சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு பனைவெல்லம் இடம்பெறுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு
ஏற்கனவே தமிழக முதல்வர் ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளார் எனவே பொங்கல் பரிசு தொகுப்பில் பனைவெல்லம் கொடுக்க வாய்ப்பில்லை தெரிவித்தார்.
No comments:
Post a Comment