பிரபல பாடகரும், திரைப்பட நடிகருமான மாணிக்க விநாயகம் மாரடைப்பு காரணமாக இன்று மாலை 06.40 மணியளவில் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இவருக்கு வயது 73. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 800 படங்களுக்கு மேல் பாடியுள்ளார்.
தமிழில் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர் மாணிக்க விநாயகம். இவர் திருடா திருடி, தூள், தில், சந்திரமுகி, சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வானொலியிலும் இவர் பாடியுள்ளார். ஹார்மோனியம் வாசிப்பதில் வல்லமை கொண்ட இவர் பல பக்தி பாடல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் இருதய அறுவை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் இறப்பை அறிந்து திரைத்துறையினர் மற்று ரசிககர்கள் சோகமடைந்துள்ளனர். தற்போது திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை காலை சுமார் 7 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணிக்க விநாயகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிறந்த இடம் மயிலாடுதுறை என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment