மதுராந்தகம் ஒன்றிய பெண் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒழுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா (35). இவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றிவந்தார். இவரின் கணவர் செந்தில். இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அலுவலராக பணியாற்றுகிறார். தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளான்.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 15வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட ரேணுகா பெற்றிப்பெற்றார். இதன்பிறகு அவர், திமுகவில் இணைந்து பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில், இன்று காலை ரேணுகா தனது வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்ததும் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசார் சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, குடும்ப பிரச்சனை காரணமாக ரேணுகா தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். பெண் கவுன்சிலர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
மதுராந்தகம் வட்டார செய்திகள்
முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- தமிழக செய்திகள்
- தேசிய செய்திகள்
- சர்வதேச செய்திகள்
- அரசியல் செய்திகள்
- ஆன்மீக செய்திகள்
- சினிமா செய்திகள்
- விளையாட்டு செய்திகள்
- வேலைவாய்ப்பு செய்திகள்
- மருத்துவம் / ஆரோக்கியம்
- பொது தகவல்கள்
No comments:
Post a Comment