கன்டெய்னர் லாரி மோதி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் பகுதியில் லாரி ஓட்டுநரான பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காட்டாராம்பாக்கம் செல்ல இருங்காட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி வந்த லாரி பாலாஜி ஓட்டி வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து கீழே விழுந்து விட்டார்.
அப்போது சென்னை நோக்கி சென்ற லாரி பாலாஜியின் மீது மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment