வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திடீரென அருகில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 17, 2021

திடீரென அருகில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி.!

காஞ்சிபுரம் மாவட்டம், காலூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீரென அருகில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 


அப்போது, பள்ளி வகுப்பறைகளில் நுழைந்து பார்வையிட்ட ஆட்சியர் ஆர்த்தி மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து 5 மற்றும் 6 ஆம் வகுப்பு, மாணவ மாணவிகளுக்கு வகுப்பறை கரும்பலகையில் எழுதி இருந்த ஆங்கில இலக்கண பாடத்தை படிக்க வைத்து அதற்கான விளக்கத்தை மாணவ - மாணவிகளுக்கு கூறி பாடம் நடத்தினார்.

அப்போது மாணவர்களிடம் தொடர்ந்து ஆங்கில இலக்கணம் குறித்த கேள்விகளை எழுப்பினார். பதில் தெரியாமல் இருந்த மாணவர்களிடம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அர்த்தி எவ்வாறு அதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை குறித்து விளக்கி கூறினார். 

இதனை தொடர்ந்து பல மாணவர்களிடம் புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொல்லி சோதனை செய்தார். சரியாக படிக்காத மாணவர்களை திருத்தியது, மட்டுமில்லாமல் ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிப்பதற்கு தொடர்ந்து பயிற்சி கொடுங்கள், மாணவர்கள் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் கிளாஸில் இருப்பதால் தொடர்ந்து பயிற்சி அளியுங்கள் என கோரிக்கை வைத்தார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment