இந்த தொடரின் முதல் போட்டி தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 123 ரன்களும், மாயன் அகர்வால் 60 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 197 ரன்களுக்கே தென் ஆப்ரிக்கா அணி ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தநிலையில், இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய முகமது ஷமி இதன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
இந்திய அணிக்காக மொத்தம் 55 டெஸ்ட் போட்டிகளில் (103 இன்னிங்ஸ்) விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார் ஷமி. கபில் தேவ் 50 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 மற்றும் அதற்கும் மேலான விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர்கள் வரிசையிலும் ஷமி இணைந்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை ஷமி கைப்பற்றி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
விளளாயட்டு செய்திகள்
முந்தைய விளையாட்டு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment