எருக்கு இலைகளை நெருப்பிலிட்டு வாட்டி, சூடாக இவ்விலை மேல் நின்றால் சில நாட்களில் குதிகால் வலி குறையும். மருதோன்றி இலையை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் கஷாயமாக்கி ஒத்தடம் கொடுக்கச் சுளுக்கு குறையும்.
சுளுக்கு குணமாக நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள்.
விரல்களில் உள்ள வலி குணமாக விரல்களை தினமும் சிறுது நேரம் நீட்டி மடக்கும் பயிற்சியை செய்து வர குணமாகும்.
கால்விரல் புண் குறைய கால்விரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, திரிபலாசூரணம், கருங்காலிக் கட்டை, வேப்பிலை, எள்ளு சேர்த்து அரைத்து பூச கால்விரல் இடுக்கில் உள்ள புண் குறையும்.
No comments:
Post a Comment