செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே, அதிவேகமாக வந்த கார் சரக்கு வேனில் மோதி, சாலை சரிவில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையிலிருந்து, மாமல்லபுரத்திற்கு சென்று கொண்டிருந்த சரக்கு வேனானது மாமல்லபுரத்தை அடுத்த புதிய எடையூர் பகுதியில் சுமார் 4: 30 மணிக்கு கடந்தது. அதில் ஐந்து பேர் பயணம் செய்தனர். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த 'ஹூண்டாய் அஸ்தா கார்', வேனை முந்த முயன்றபோது பக்கவாட்டில் மோதி வேன் சாலையில் கவிழ்ந்தது.
பின்னர், கட்டுப்பாட்டை இழந்த கார் சற்று துாரம் ஓடி இருளர் குடிசை பகுதி சரிவில் சரிந்து உருண்டது. வேன் மற்றும் காரில் சென்ற நான்கு பேர் படுகாயமடைந்தனர். மாமல்லபுரம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு
முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment