செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் ஆ.ராகுல்நாத் இ.ஆ.ப. தலைமையில் நேற்று நடந்தது.
அதில், இடைக்கழிநாடு பேரூராட்சியில் 15 ஆண்டாக மூடிக்கிடக்கும் கூட்டுறவு பதனீர் தொழிற்சாலையை திறக்க வேண்டும். விவசாயம் பாதிக்கும் வகையில் செயல்படும் கல் குவாரிகளை மூட வேண்டும். ஏரிகளில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். பாலாற்றில் கூடுதலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும். கிராம நத்தத்தில் குடியிருப்போருக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.
மேலும், காட்டுப்பன்றி தொல்லையில் இருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் கொடுக்கும் மனுக்களுக்கு அரசு அலுவலர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். விவசாயத்துக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கும் கூட்டுறவு விவசாய கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து, விசாயிகளிடம் இருந்து 165 மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து ஆட்சியர் ராகுல்நாத் பேசுகையில், விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு பதில் அளிக்க தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்
முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment