உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிரிஷ் தகோர்லால் நானாவதி இதய செயலிழப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 86.
குஜராத்தை பூர்விகமாக கொண்ட இவர், 1958இல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். 1979இல் குஜராத் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். ஒடிசா மறறும் கர்நாடகா உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும் இவர் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2000 வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் இடம்பெற்றிருந்த இவர், 2014-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். 1984-ல் நடந்த சீக்கிய கலவரம் குறித்து விசாரிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைத்த விசாரணை கமிஷனுக்கும் தலைவராக இருந்தார்.
No comments:
Post a Comment