வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி காலமானார்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 19, 2021

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி காலமானார்!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிரிஷ் தகோர்லால் நானாவதி இதய செயலிழப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 86.


குஜராத்தை பூர்விகமாக கொண்ட இவர், 1958இல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். 1979இல் குஜராத் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். ஒடிசா மறறும் கர்நாடகா உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும் இவர் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2000 வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் இடம்பெற்றிருந்த இவர், 2014-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். 1984-ல் நடந்த சீக்கிய கலவரம் குறித்து விசாரிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைத்த விசாரணை கமிஷனுக்கும் தலைவராக இருந்தார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment