வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சசிகலா எந்த காலத்திலும் பொதுச்செயலாளர் ஆக முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | Ex Minister Jayakumar talk about Sasikala | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 03, 2021

சசிகலா எந்த காலத்திலும் பொதுச்செயலாளர் ஆக முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | Ex Minister Jayakumar talk about Sasikala | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


சேலத்தில் அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

அ. தி. மு. க. வில் பொதுக்குழு சர்வ வல்லமை மற்றும் அதிகாரம் படைத்தது. பொதுச்செயலாளரை பொறுத்தவரை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர். இதனை யாராலும் மாற்ற முடியாது.

அதற்கு பதிலாக தான் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பதவிகளுக்கு தான் தேர்தல் நடைபெறுகிறது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் கிளை செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்ப முடியும். இது ஒரு அடிப்படையான விஷயமாகும்.

மேலும் எந்த ஒரு மரபு மற்றும் சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படவில்லை. இன்றைக்கு ஒரு பிரதான எதிர்க்கட்சியாக அ. தி. மு. க. விளங்குகிறது. தி. மு. க. வுக்கும், அ. தி. மு. க. வுக்கும் 3 சதவீத வாக்குகள் தான் வித்தியாசம்.

எம். ஜி. ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பின்னர் அ. தி. மு. க. இருக்காது என்று தி. மு. க. வினர் கூறினர். இன்றைக்கு எம். ஜி. ஆர். , ஜெயலலிதா நல்லாசியுடன் இரட்டை இலை என்கிற மேஜிக் வெற்றி சின்னம் உள்ளது. கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டாலும் முடிவில் முடிவுகள் என்பது ஒருமித்த கருத்துடன் உள்ளன. இதுவே ஒரு இயக்கம் கட்டுக்கோப்புடன் இருப்பதற்கு சான்றாக இருக்க முடியும். சிலர் நீக்கப்பட்டதால் கட்சியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

யாரோ ஒரு சிலர் கட்சியை விட்டு சென்றார்கள் என்றால் அவர்களை அரசியல்வாதி என்று நிச்சயமாக கருதமாட்டேன். அவர்களை பொறுத்தவரை கொக்குகள் போல் எந்த குளத்தில் தண்ணீர் இருக்கிறது? என பறந்து, பறந்து சென்று பார்க்கும் அரசியல் வியாபாரிகள். எம். ஜி. ஆர். , ஜெயலலிதா மீது பக்தி உடையவர்கள், அ. தி. மு. க. ரத்தம் ஓடுகின்றவர்கள் எந்த காலத்திலும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். 2-ம் கட்ட தலைவர்களை உருவாக்கி விடலாம். ஆனால் தொண்டர்களை உருவாக்க முடியாது.

சசிகலா கட்சி கொடியை பயன்படுத்துவது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளோம். போலீஸ் நிலையத்தில் கட்சி சார்பில் புகார் கொடுத்துள்ளோம். சட்ட நடவடிக்கை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறோம்.

பொதுச்செயலாளர் என்று அவர், அ. தி. மு. க. கட்சி கொடியை பயன்படுத்துவதால் எந்த காலத்திலும் அதன்படி ஆகிவிட முடியாது. கூட்டணியை பொறுத்தவரை யார் வந்தாலும், வராவிட்டாலும் அவர்கள் விருப்பமாகும். அதை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


சேலத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் கூறியதாவது: -

கட்சியில் எம். ஜி. ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திட்டங்களில் ஒன்றான பொதுச்செயலாளர் பதவி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நடைமுறைக்கு அது கொண்டு வரப்பட வேண்டும் என்பது தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் விருப்பம். அப்படி ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளோம்.

அ. தி. மு. க. வுக்கு பொதுச்செயலாளர் பதவி ஒரு கண்ணாக இருந்தது. தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரு கண்களாக இருக்கிறார்கள். சசிகலா வருகையை தொண்டர்கள் ஒரு சதவீதம் கூட விரும்பவில்லை. சசிகலா அ. தி. மு. க. வின் உறுப்பினர் கிடையாது. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வருவார் என்று யாரும் கூறவில்லை. அ. தி. மு. க. வில் ஒற்றை தலைமை வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. எதிர்காலம் அ. தி. மு. க. விற்கு செழிப்பாக இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் அ. தி. மு. க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment